உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் அணை அருகே குடிநீர் தேடி வந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. சிவகாசி அருகே அர்ஜூனா நதி, ஆனைக்குட்டம் அணை மற்றும் முட்காடுகளில் மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி-அதி வீரன்பட்டி ரோட்டில் ஆனைக்குட்டம் அணை அருகே குடிநீர் தேடி வந்த 3 வயதுடைய ஆண் புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்தன. இதில் தலை மற்றும் காலில் காயமடைந்த புள்ளி மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை