ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்ட் பணி கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.13 கோடி மதிப்பில், அச்சங்குளம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டை கலெக்டர் சுகபுத்ரா நேற்று ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டினை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு உயரமாகவும், பஸ் ஸ்டாண்டின் தரை தளம் தாழ்வாகவும் இருக்கும் நிலையில் ரோடு அமைக்க கூடுதல் நிதி கோரி தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத கடைசிக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கலெக்டர் சுகபுத்ரா அறிவுறுத்தினார். ஆய்வின் போது தாசில்தார் பாலமுருகன், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.