உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,செண்பகத்தோப்பில் போலீஸ் செக் போஸ்ட்: மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவி.,செண்பகத்தோப்பில் போலீஸ் செக் போஸ்ட்: மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் குடிமகன்களின் அட்டகாசம், சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.செண்பகத் தோப்பில் வனத்துறை சார்பில் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுவதால் பிற பகுதி தோப்புகளில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவதும், குடிபோதையில் ஓடை, நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ராக்காச்சி அம்மன் கோயில் அருவியில் குளிப்பதற்கு நீச்சல் தெரியாதவர்களும், போதையில் வருபவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் எவ்வித அலைபேசி தொடர்பும் இல்லாத நிலையில் விபத்துக்கள் ஏற்பட்டால் போலீஸ், தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான ராக்காட்சியம்மன் கோயில், அத்தி துண்டு, செண்பகத் தோப்பு பகுதிகளில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி