உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிவேகத்தில் கனரக வாகனங்கள் அச்சத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்

அதிவேகத்தில் கனரக வாகனங்கள் அச்சத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்,: ஸ்ரீவில்லிபுத்துாரில் டாரஸ் லாரிகள், டிராக்டர்கள் அதிவேகத்தில் செல்வதால் நடந்து செல்பவர்களும், டூவீலரில் செல்பவர்களும் விபத்து அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகரில் நான்கு வழிச்சாலை பணிக்காக டாரஸ் லாரிகளிலும், செங்கல் சூளைகளுக்கு மண் கொண்டு செல்லும் டிராக்டர்களும், கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் பள்ளிகள் உள்ள ரோடுகள் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதே போல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் முதியவர்கள் ரோடுகளை கடக்க முடியாமல் தவிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன்பு, அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !