உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில செயற்குழு கூட்டம்

மாநில செயற்குழு கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.இதில் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் மனோகரன், நிதிநிலை அறிக்கையை மாநில பொருளாளர் பாண்டியராசன் சமர்ப்பித்தனர். டான்சாக் முன்னாள் பொதுச் செயலாளர் ஷெரீப், சங்க முன்னாள் மாநில பொருளாளர் நல்லையன், அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.இதில் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு 100 சதவீதம் ஊதிய மானியம் வழங்கி கருவூலம் மூலமாக நேரடி ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில துணை தலைவர் சாமிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !