உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

விருதுநகர்; விருதுநகர் கே.வி.எஸ். ஆங்கில வழிப்பள்ளியில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.இப்பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,' இப்பள்ளி 1970 ல் துவங்கப்பட்டு 2012 முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்து அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் தனது கல்வி பணியை தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் திறனை மேம்படுத்துவதற்காக ரோபோடிக்ஸ் ஆய்வகம், அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நுாலகங்கள், பிரமாண்டமான கலையரங்கம், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு வகுப்புகள் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர் திட்டம், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம், வெளியூர் மாணவர்களுக்கான விடுதி வசதி, ஜிபிஎஸ் ட்ராக்கிங் உடன் பஸ் வசதி, சிசிடிவி கண்காணிப்பு சுவைமிகு மதிய உணவு, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஆகியன பள்ளியின் தனி சிறப்பு அம்சங்களாக உள்ளன. தற்போது 2025 -- 26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருபாலரும், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களும் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு www.kshatriyaems.comஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்,என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை