நாளை மாணவர்கள் குறைதீர் கூட்டம்
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை காலை 9:30 மணிக்கு அலுவலகக் கூட்டரங்கில் நடக்கிறது. பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்த தகவல்களை இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்அடையலாம், என்றார்.