உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதார் அப்டேட்டிற்காக மாணவர்கள் பரிதவிப்பு

ஆதார் அப்டேட்டிற்காக மாணவர்கள் பரிதவிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் ஆதார் அப்டேட்டிற்காக கூடிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். நேற்று வங்கிமுன் காத்திருந்து ஏமாறுவதாக முற்றுகையிட்டனர். இதை தவிர்க்க பள்ளிகளில் முகாம் நடத்த வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர். ராஜபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கான கெடு என தகவல் வந்ததில் தினமும் மாணவர்களின் பெற்றோர் ராஜபாளையத்தில் செயல்படும் ஏழு முகாம்களுக்கு படை எடுத்தனர். மொத்தம் உள்ள ஆதார் சேவை மையங்களில் ஸ்டேட் பேங்க், நகராட்சி அலுவலகம் இரண்டும் பழுது காரணமாக செயல்படாத நிலையில் தனியார் வங்கி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் கூடினர். நேற்று பி.எஸ்.கே பார்க் அருகே தனியார் வங்கியில் நுாற்றுக்கும் அதிகமான பெற்றோர் ஒன்று கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. தினமும் வந்து பதிவு செய்ய முடியாமல் திரும்பி செல்வதாக கூறி வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர். இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 30 டோக்கன் மட்டும் வழங்குகின்றனர். அப்டேட்டிற்கான கால அவகாசம் இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். பள்ளி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து மாற்று வழி காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி