உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மானிய விலையில் பவர் டில்லர், களை எடுக்கும் கருவி

மானிய விலையில் பவர் டில்லர், களை எடுக்கும் கருவி

விருதுநகர்: வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், விசை களை எடுக்கும் கருவிகளுக்கு அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில்எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும்.விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையை இணையவழி அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது வினியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு விருதுநகர் 82202 53460, ஸ்ரீவில்லிபுத்துார் 63792 39272 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி