சூப்பர் ரிப்போர்ட்டர்
ஸ்ரீவில்லிபுத்துார்: சர்ச் சந்திப்பில் செயல்படாத சிக்னல், ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி என ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நகரின் மையப்பகுதி வழியாக மதுரை- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அதிக அளவில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. அதிலும் காலை, மாலை நேரங்களில் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை வருவது அதிகரித்து வருவதால் சர்ச் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப் பட்டு பல ஆண்டுகளான டிராபிக் சிக்னல்கள் காட்சி பொருளாக மட்டுமே நிற்கிறது. செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் டிராபிக் போலீசார் தான் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நின்று ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையுள்ளது. சாதாரண நாட்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படும் நிலையில் தற்போது நான்கு வழிச்சாலை வழியாக வரும் வாகனங்கள் சர்ச் சந்திப்பு வழியாக வரு வதால் மேலும் போக்கு வரத்து நெருக்கடி அதி கரித்து வருகிறது. ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதி கரித்து வாகனங்கள் ஒழுங்கின்றி தாறுமாறாக நிறுத்தப்படுவதால் மேலும் சிரமம் ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆம் புலன்ஸ்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் இருந்து நீதிமன்றம், செங்குளம் விலக்கு, லயன்ஸ் ஸ்கூல் ரோடு வழியாகவும் வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சரிசெய்ய வேண்டும் ஈஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்துார்: சர்ச் சந்திப்பில் இருந்து நீதிமன்றம் வரை ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றவும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாக னங்களை அப்புறப் படுத்தவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்கு வரத்து நெருக்கடிகளை சரி செய்து எளிதில் மக்கள் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்துார்: தற்போது அழகா புரியிலிருந்து ஸ்ரீவில்லி புத்துார் ரயில்வே மேம்பாலம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில், தொலைதூர நகரங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ராஜபாளையம் செல்வதற்கு சர்ச் ரோடு வழியாகவும், லயன்ஸ் ஸ்கூல் ரோடு வழியாகவும் வருவதால் நகரில் போக்கு வரத்து நெருக்கடி அதி கரித்து வருகிறது. இதனை தவிர்க்க மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தினமும் விபத்து அபாயம் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் புது பஸ் ஸ்டாண்ட் சர்வீஸ் ரோட்டில் இறங்கி சிவகாசி ரோடு வழியாக சர்ச் சந்திப்புக்கு வருவதால் விபத்து அபாயம் காணப் படுகிறது. இன்னும் நான்கு வழி சாலை போக்கு வரத்திற்கு வராத நிலையில் தற்போதே தினமும் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை சரி செய்ய போக்குவரத்து காவல் துறையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.