தமிழ்த்துறை கருத்தரங்கு
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கியம் எனும் உலகப் பேரிலக்கியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லுாரித் தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. துறைத் தலைவர் பெரியசாமி ராஜா வரவேற்றார். செயலாளர் மகேஷ் பாபு துவக்கினார். உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார்.