உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தேர்தல்; தபாலில் வரும் ஓட்டு சீட்டுகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தேர்தல்; தபாலில் வரும் ஓட்டு சீட்டுகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தில் 2009க்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 6 இடங்களுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களான ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்மசிஸ்டுகளுக்கு தபால் மூலம் ஓட்டு சீட்டுகள் அனுப்பப்பட்டு அவர்கள் ஓட்டளித்து வருகின்றனர்.15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் 6 பேர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது நடக்கும் தேர்தலில் 6 இடங்களுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் டி.பார்ம், பி.பார்ம், பார்ம்- டி படிப்புகள் படித்து பார்மசி கவுன்சிலில் பதிவு செய்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்மசிஸ்டுகள் வாக்காளர்களாக உள்ளனர்.கடந்த மார்ச் 3 முதல் தேர்தல் நடைமுறைகள் துவங்கிய நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு பார்மசி கவுன்சில் சார்பில் அனுப்பப்பட்ட ஓட்டு சீட்டுகள் தபால் மூலம் வீடு தேடி வர துவங்கியுள்ளது.இதனை பூர்த்தி செய்தும், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தும் ஜூன் 30க்குள் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு பார்மசி கவுன்சில் அலுவலகத்திற்கு ஓட்டு சீட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 1ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு ஜூலை 16ல் தேர்தல் முடிவுகள் அரசிதழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களை நேரில் சந்திக்க இயலாத நிலையில் உள்ள வேட்பாளர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்து தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதனை ஏற்று பார்மசிஸ்ட்டுகள் ஆர்வத்துடன் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை