உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாஸ்மாக் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

டாஸ்மாக் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

விருதுநகர்: விருதுநகரில் காலி மதுபாட்டில்கள் சேகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் துணை தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் புங்கலிங்கம், பொதுச்செயலாளர் ராஜன், மாநில தலைவர் பாலுச்சாமி பேசினர். காலி மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்தால் ரூ.10 கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாட்டில்கள் சுகாதாரமற்ற முறையில் காணப்படும், கடையில் வைக்க இடமில்லை. பீக் அவரில் சில்லறை பற்றாக்குறை போன்ற நடைமுறை சிக்கல் உள்ளதால் அரசு திரும்ப பெற வேண்டும் என்றனர். செயற்குழு உறுப்பினர் ஜவஹர்லால் நேரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ