தொழில்நுட்ப கருத்தரங்கு
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் காமராஜ் விண்வெளி சங்கத்தின் சார்பில் இஸ்ரோ செயற்கை கோள் உந்து விசை அமைப்பின் சவால்கள் என்ற தலைப்பில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. இதில் பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கஹன்யான் திட்டத்தின் துணை திட்ட இயக்குனர் கார்த்திகேயன் பங்கேற்று பேசுகையில், “இந்தியா மொத்தமாக 103 செயற்கை கோள்களை ஒரே கட்டமைப்பில் விண்ணில் ஏவிய முதல் நாடு என்ற பெருமை கொண்டது. விண்வெளி தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதும், அதை மேம்படுத்துவதும் தான் முதன்மையான இஸ்ரோவின் குறிக்கோள்,” என்றார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்து பேசினார். முதல்வர் செந்தில் வாழ்த்தினார்.