உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தெலுங்கானா மாணவர் தற்கொலை

தெலுங்கானா மாணவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்:தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பர்க்காம்பாத் மண்டல் என்ற ஊரைச் சேர்ந்தவர் நவ்படா ஹர்ஷித் 19. இவர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பல்கலை விடுதியில் தங்கி அங்கு பி. டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை வகுப்பிற்கு சென்று விட்டு 11:00 மணிக்கு விடுதி அறைக்கு வந்து தனது நண்பர் கிருஷ்ண வம்சி என்பவருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ