மேலும் செய்திகள்
பன்னீர்மடை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
02-May-2025
நரிக்குடி: நரிக்குடி என். பள்ளப்பட்டியில் அரிய சுவாமி, சன்னாசி, விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரை கடம் புறப்பாடாக அரிய சுவாமி கோயில் வளாகத்தை சுற்றி வந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு, கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
02-May-2025