உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கோயில் கும்பாபிஷேகம்

 கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரம் - சிவானந்தபுரம் சீலைக்காரி முத்து இருளாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மகா கணபதி பூஜை, கோமாதா பூஜை, வாஸ்து சாந்தி, துவாரக பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புனித நீரை சிவாச்சார்யார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் தீபாராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், திமுக., நகர செயலாளர் மணி, அருப்புக்கோட்டை அதிமுக., மகளிர் அணி இணைச் செயலாளர் சித்ரா ஜெய்சங்கர், புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின் முறை தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி