/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் தெப்ப மண்டப கலசம் மின்னல் தாக்கி சேதம் ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் தெப்ப மண்டப கலசம் மின்னல் தாக்கி சேதம்
கோயில் தெப்ப மண்டப கலசம் மின்னல் தாக்கி சேதம் ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் தெப்ப மண்டப கலசம் மின்னல் தாக்கி சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரில் உள்ள தாமரை தெப்பத்தின் மையப் பகுதி மண்டப கலசம் மின்னல் தாக்கி சேதமானது.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரில் தாமரை தெப்பம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் கும்பாபிஷேகத்தின் போது தெப்பத்தின் மையப்பகுதி மண்டபத்தில் அமைந்துள்ள விமானம், கலசம் புதுப்பிக்கப்பட்டது.நேற்று மாலை 5:30 மணிக்கு நகரில் பலத்த மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் தாமரை தெப்பத்தின் மைய மண்டபத்தில் இருந்த பித்தளை கலசத்தின் மீது மின்னல் தாக்கியதில் பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு ஏற்பட்டு கலசமும், விமானத்தின் ஒரு பகுதியும் சேதமானது. இதனை கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.