உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விபத்து அபாய ரோட்டை அகலப்படுத்த வேண்டும்

விபத்து அபாய ரோட்டை அகலப்படுத்த வேண்டும்

விருதுநகர்: விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டில் விபத்து அபாயம் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி பகுதியில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, கமுதி, ராமநாதபுரம் செல்லும் பஸ்கள், கார்கள் அருப்புக்கோட்டை முக்கு ரோடு வழியாக செல்கின்றன. இதனால் இப்பகுதி எல்லா நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்த ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி அருகே வேகமாக செல்வதை தவிர்ப்பதற்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.இவை நடுரோட்டில் இருப்பதால் ஒரு வாகனம்மட்டுமே செல்ல முடிகின்றது. மேலும் ரோட்டின் இருபுறமும் போதிய இடம் உள்ளது. விபத்து பகுதியாக இருந்தும் ரோட்டை அகலப்படுத்தாமல் பேரிகார்டு வைத்து குறுகலனாக பகுதியாக மாற்றிவிட்டனர்.இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் திண்டாடுகின்றன. எனவே அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி பகுதியில் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை