உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பக்தர்களிடம் கட்டணம் வசூல் ஜீயர் தலைமையில் முற்றுகை

பக்தர்களிடம் கட்டணம் வசூல் ஜீயர் தலைமையில் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் பேச்சியம்மன், காட்டழகர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அறநிலையத்துறை, வனத்துறை போட்டி போட்டு நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர். நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜர், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை.நேற்று மதியம் 12:00 மணிக்கு செண்பகத்தோப்பு வனத்துறை கேட் முன் சடகோப ராமானுஜ ஜீயர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துறவிகள் பேரவை நிர்வாகி சரவணகார்த்திக், பா.ஜ.,மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா மற்றும் பலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.வனத்துறை அலுவலர்களிடம் பேசிய ஜீயர், ''பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலிக்க கூடாது. இன்று முதல் நிரந்தரமாக கைவிட வேண்டும். இதுகுறித்து ஓரிரு நாட்களில் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கட்டணம் வசூலித்தால் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராடுவோம்,'' என்றார்.போராட்டத்தையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை