உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறப்பு அலுவலர்களால் திண்டாடும் ஊராட்சிகள் விடாது துரத்தும் கருப்பாய் குப்பை எரிப்பு காற்று மாசுக்கும்  வழியாகுது

சிறப்பு அலுவலர்களால் திண்டாடும் ஊராட்சிகள் விடாது துரத்தும் கருப்பாய் குப்பை எரிப்பு காற்று மாசுக்கும்  வழியாகுது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பை எரிப்பது குறைந்தபாடில்லை. விடாது துரத்தும் கருப்பு போல நீரோடைகளில் கூட குப்பை போட்டு எரித்து விடுவதால் சுவாசக் கோளாறுகள் அதிகமாக உள்ளன. ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்களே உள்ளதால் சுகாதாரத்தில் சுத்தமாக கவனம் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தின் முந்தைய கலெக்டர் ஜெயசீலன் உள்ளாட்சிகளில் குப்பை எரிக்க கூடாது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து உள்ளாட்சி அதிகாரிகள், அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.தற்போது புதிய கலெக்டராக சுகபுத்ரா பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரும் இதை கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது. காரணம், ஊரக உள்ளாட்சிகளில் சிறப்பு அலுவலர்களே பணியில் இருப்பதால் பெரிய அளவில் சுகாதார பணிகள் கண்காணிக்கப்படுவதில்லை.இதனால் குப்பை அகற்றப்படாமலே ஆங்காங்கே எரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் இதே நிலை நகராட்சிகளிலும் தொடர்கிறது. மேலும் நீர்வரத்து ஓடைகளை குப்பை கிடங்குகளாக்கி அவற்றில் எரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த புகை ஒரு வித நாற்றத்துடன் இருப்பதால் மக்கள் முகம் சுளித்த படி செல்கின்றனர். எனவே குப்பை எரிப்போரை தடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இதில் தீவிரம் காட்டாவிட்டால் நாளடைவில் காற்று மாசு பெரிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை