மேலும் செய்திகள்
கற்கள் பெயர்ந்து பள்ளம் நிறைந்த சாலை
10-Aug-2025
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் பறையன்குளம் ஊருணியை துார்வார ரூ. ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டும், நிதி திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி மாநகராட்சி 17 வது வார்டு திருத்தங்கல் கூடலிங்கம் சந்து பகுதியில் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பறையன்குளம் ஊருணி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஊருணி குளிக்க, துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. தவிர இப்பகுதியினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. தற்போது ஊருணி முழுவதும் நகரின் மொத்த கழிவு நீரும் தேங்கியும் ஆகாயத்தாமரைச் செடிகள் ஆக்கிரமித்தும் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் ஏற்படுவதோடு அப்பகுதியினர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் ஊருணி நிறைந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றது. எனவே ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து 2022ல் ஊருணியை துார்வாரி தடுப்புச் சுவர், படிகள் அமைப்பதற்காக ரூ. ஒன்றரை கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமலேயே 2023 இறுதியில் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மீண்டும் நிதி ஒதுக்கி ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
10-Aug-2025