உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது

ராஜபாளையம் : விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ராஜபாளையத்தில் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜபாளையம் அருகே சேத்துார், செட்டியார்பட்டி பேரூராட்சிகளின் தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு வழங்குவதற்காக சேத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.4.41 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தனி துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், நகராட்சி தலைவர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நக்கனேரி கிராமத்தில் நபார்டு, கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2025--26ல் ரூ.3.60 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அவர் கூறியதாவது: ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது இணைப்பு சாலைக்கு கோரிக்கை விடுத்தோம். இப்போது அவர் முதல்வராகி ரூ.30 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது. சேத்துார் செட்டியார்பட்டி பேரூராட்சி நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேரம் மும்முனை மின் இணைப்பு, நக்கனேரியில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மருத்துவ உபகரணங்கள் வந்து கொண்டு இருக்கிறது விரைவில் முதல்வர் திறந்து வைப்பார். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு நிதி அனுமதி வழங்காது, என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ