மேலும் செய்திகள்
ரோட்டில் விழுந்த மின்கம்பி
04-Feb-2025
சிவகாசி: திருத்தங்கல் கே.கே., நகர் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் செல்வராணி 48. பட்டாசு குழாய் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 9:00 மணியளவில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.இதில் வீடு, பீரோ, கட்டில் ,துணிகள், ரூபாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருத்தங்கல்போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Feb-2025