உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேவையான வளர்ச்சிப் பணிகள் செய்வது இல்லை.

தேவையான வளர்ச்சிப் பணிகள் செய்வது இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலும் ஆயிரத்து 50 கண்மாய்கள் உள்ளன. கிராமங்களில் கண்மாய் பாசனத்தை சார்ந்து பல பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. ஆனால் கண்மாய்களை ஆண்டுதோறும் மழைக் காலத்திற்கு முன்பு முறையாக பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் தேவையான வளர்ச்சிப் பணிகள் செய்வது இல்லை. பல கோடி ரூபாய்களை செலவழித்து கண்மாய்களுக்கு தூர் வாறுதல், கரையை பலப்படுத்துதல், மறுகால் ஓடைகளை சரி செய்தல், ஷட்டரை பழுது பார்த்தல் என கண்மாய்களுக்கு செலவழிக்கப்படும் தொகையை கோடிக்கணக்கில் பட்டியல் மட்டும் இடுகின்றனர். ஆனால் மழைக் காலங்களில் மிதமான மழை பெய்தால் கூட கண்மாயில் தேங்கும் தண்ணீரை தக்க வைக்க முடியவில்லை. 5 நாட்களுக்கு முன்பு, பெய்த தொடர் கனமழையில் மாவட்டத்தில் பல்வேறு கண்மாய்கள் நிறைந்தன, பல உடைந்தன .பல தண்ணீர் நிறைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.திருச்சுழி அருகே பரளச்சி பெரிய கண்மாய் தொடர்ந்து பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறி அருகில் உள்ள 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக ஆனது. திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் மூலக்கரைப்பட்டி அருகில் உள்ள கால்வாய் உடைந்து தண்ணீர் கண்மாய்க்கு செல்ல முடியாமல் வீணானது. காளையார் கரிசல்குளம் கண்மாய் உடைந்து அருகில் உள்ள 3 தெருக்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அருப்புக்கோட்டை செவல் கண்மாய் முழுவதும் தண்ணீர் நிறைந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் ஆகாயத்தாமரைகள் கழிவு நீர் கலந்து தண்ணீர் கருப்பு கலரில் உள்ளதால் இதை பயன்படுத்து முடியவில்லை. கண்மாயை தூர்வார, 4 கோடி ரூபாய் செலவழித்தும் பயன் இல்லாமல் போய்விட்டது பணிகளையும் கிடப்பில் போட்டு விட்டனர்.அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் தண்ணீரில் ஊரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் சாயக்கழிவு நீரும் கலப்பதால் தண்ணீர் நிறைந்தும், கண்மாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீரை பயன்படுத்து முடியவில்லை. தண்ணீர் சாய கழிவினால் விஷமாக மாறிவிட்டதால் செடிகளுக்கு தண்ணீரை பாய்ச்சும் போது பட்டுப் போய் விடுவதாக அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.கண்மாய்களை உரிய காலகட்டத்தில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி மழை நீர் ஓடைகள், மடைகள் ஆகியவற்றை தொடர்ந்து பராமரிப்பு செய்தால் கண்மாய்கள் தண்ணீர் சேரும். இதேபோன்று கண்மாய்களில் மழைநீர் மட்டும் சேகரம் ஆகின்ற வகையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கண் மாய்கள் தண்ணீரை பயன்படுத்த முடியும். அரசு கோடிக்கணக்கான நிதிகளை ஒதுக்கி நீர் நிலைகளை பாதுகாப்போம் என அறிவித்தால் மட்டும் போதாது. விவசாயிகள் அதை பயன்படுத்தக்கூடிய அளவில் பணிகளைச் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை