உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 24வது நாளாக காத்திருப்பு போராட்டம்

24வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் : பழைய ஓய்வூதிய திட்டம், பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பு சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆக. 18 முதல் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. 24வது நாளான நேற்று மதுரை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல துணைத் தலைவர் முனீஸ்வரன் காத்திருப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் மதுரை சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் ராஜேந்திரன், விருதுநகர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல தலைவர் வேலுச்சாமி, மண்டல பொதுச் செயலாளர் போஸ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி