உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சர் பூமி பூஜை போட்டும் 2 ஆண்டாக போடாத ரோடு

அமைச்சர் பூமி பூஜை போட்டும் 2 ஆண்டாக போடாத ரோடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே இந்திரா நகரில் ரோடு போட அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை போட்டும் 2 ஆண்டாக பணி நடக்காததால் வேதனையடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதி இந்திரா நகர். இதில், 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பாலையம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் ரோடு கரடு முரடாக, கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். மழை காலத்தில் சேறும், சகதியுமாக உள்ளது. பல தெருக்களில் தெரு விளக்குகளும் இல்லை. இருட்டாக இருப்பதால் இரவில் வெளியில் மக்கள் செல்ல பயப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பாக உள்ளது. ரோடு, தெரு விளக்கு கேட்டு பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. தாமிரபரணி குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. வாரத்திற்கு 2 முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தெருக்களில் வாறுகால், ரோடுகள் அமைக்க வேண்டும். வாறுகாலின்றி கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. மெயின் ரோட்டில் இருந்து கீரை தோட்டம் பகுதி வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு அமைக்க அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை போடப் பட்டது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி யாகியுள்ளது. மெயில் ரோட்டிலிருந்து இந்திரா நகர் நுழைவு பகுதியில் கிடங்காக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நடக்க முடியாத நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை