உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துர்நாற்றம் வீசும் ஊராட்சி குடிநீர் . பல ஆண்டுகளாக வடக்குநத்தம் மக்கள் அவதி

துர்நாற்றம் வீசும் ஊராட்சி குடிநீர் . பல ஆண்டுகளாக வடக்குநத்தம் மக்கள் அவதி

திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி குடிநீர் துர்நாற்றம் வீசுவதால் பல ஆண்டுகளாக புகார் கொடுத்தும் நடவடிக்கையின்றி அவதிப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வடக்குநத்தம் ஊராட்சி . ஊரில் இருக்கும் ஊருணி அருகில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி ஊரில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊருணி அருகில் உள்ள குளியல் தொட்டியில் குளிக்கும் தண்ணீர் ஊருணியில் சென்று சேர்கிறது. ஒரு பகுதியில் கழிவு நீரும் கலக்கிறது. பல ஆண்டுகளாக ஊருணியில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் தண்ணீர் கெட்டு விட்டது. போர்வெல் வழியாக வழங்கப்படும் குடிநீர் துர்நாற்றம் எடுப்பதாகவும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், இந்த தண்ணீரை பயன்படுத்தினால் வயிற்றுக் கோளாறு ஏற்படுவதாகவும், இதனால் தனியார் இடத்தில் விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துவதாகவும் இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் வடக்குநத்தம் கிராமத்திற்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.___படம் உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை