உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு துறையினர் இடையே பிரச்னையால் மண்ணுக்குள் போன சுரங்கப்பாதை

அரசு துறையினர் இடையே பிரச்னையால் மண்ணுக்குள் போன சுரங்கப்பாதை

ராஜபாளையம் : அரசு துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் ராஜபாளையம் ரயில்வே சுரங்க பாதையை மண் போட்டு மூடப்பட்டதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.ராஜபாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தை இலரகு வாகனங்கள் சுலபமாக கடக்க சுரங்கப்பாதை ரூ.3 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்டவாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு சுரங்கப்பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் தற்போது பணிகள் முடிந்த நிலையில் நகர் பகுதி இணைக்கும் அணுகு சாலை பணிக்கு ஒத்துழைப்பு இல்லை.தொடர்ந்து ஏற்பட்ட தாமதமும் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்பாதையின் நிலைத்தன்மை பாதுகாக்க வேண்டி மண் போட்டு மீண்டும் மூடி விட்டனர்.விரைந்து பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை காரணமாக ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.நகராட்சி தரப்பில் அணுகு சாலைக்கு போதிய இட வசதி இல்லை என தற்போது தெரிவிக்கும் நிலையில் பணிகள் எப்போது தொடங்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் நகராட்சி, ரயில்வே, பொதுப்பணித்துறை மூவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்திற்கு வரையறைக்கு திடீரென முட்டுக்கட்டை ஏற்படுவதால் மக்கள் விரக்தியடந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி