மேலும் செய்திகள்
பன்றிகளால் பாலைவனமாகும் விளை நிலங்கள்
07-Apr-2025
சேத்துார் : மலையடிவார விவசாய நிலங்களில் அதிகரித்து வரும் விளை பொருட்கள் திருட்டை தடுக்க போலீசார் ஒத்துழைப்பும், நடவடிக்கையும் அவசியம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தேவதானம், சேத்துார், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில், தென்னை, மா உள்ளிட்ட தோப்புகளும், வாழை, கரும்பு உள்ளிட்ட தோட்ட பயிர்களும் சாகுபடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விடுமுறை காலம் தொடங்கி உள்ளதால் விவசாய பகுதிகளில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றி திரிகின்றனர். இவர்களில் சிலர் ஆட்கள் இல்லாத விவசாய நிலத்தை ஒட்டிய பனை மரங்களில் நுங்கு சேகரிக்க என கூட்டமாக வருகின்றனர். போலீசாரிடம் முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவசாயி சுந்தர்; ஏற்கனவே யானைகள் நுழைவு, காவலாளிக்கு சம்பள பிரச்னை, காவல் கமிட்டியினரின் செயல்பாடு இல்லாதது போன்றவற்றால் பெரும்பாலான தோப்புகள் காவலாளி இல்லை. கூட்டமாக வரும் சிறுவர்கள் இளைஞர்கள் விளை பொருட்களை பறித்துச் செல்வதும், தட்டி கேட்டால் சேதப்படுத்துவதும் நடைபெறுகிறது.இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் சந்தேக நபரை நம்மிடமே அடையாளம் காட்ட கேட்கும்போது பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக விவசாயிகள் தரப்பில் புகார் வரும்போது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
07-Apr-2025