உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி லட்சுமியாபுரம் ரோட்டில் தெருவிளக்குகள் இல்லை

சிவகாசி லட்சுமியாபுரம் ரோட்டில் தெருவிளக்குகள் இல்லை

சிவகாசி : சிவகாசி ஒத்தபுளி விலக்கிலிருந்து ஏ.லட்சுமியாபுரம் செல்லும் ரோட்டில் மூன்று கிலோ மீட்டர் துாரத்திற்கு தெருவிளக்குகள் இல்லாததால் வாகன விபத்தில் சிக்கி வருகின்றனர். சிவகாசி சாட்சியாபுரம் மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் ஒத்தபுளி விலக்கில் இருந்து ஏ.லட்சுமியாபுரம் செல்லும் ரோடு முக்கிய மாற்று பாதையாக உள்ளது. இந்த ரோட்டில்தான் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்லும் வாகனங்கள், பட்டாசு ஆலைகளின் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தேவர் குளம், ரிசர்வ் லைன், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகருக்குள் டூவீலரில் வருபவர்கள் இதே ரோட்டில் தான் வந்து செல்கின்றனர். அதே சமயத்தில் இந்த ரோடு மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளது. மிகவும் குறுகலாக உள்ள இந்த ரோட்டில் எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி முழுவதுமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ரோடும் சேதம் அடைந்த நிலையில் தெருவிளக்குகளும் இல்லாததால் இதில் வருகின்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி