மேலும் செய்திகள்
3 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
08-Nov-2024
சிவகாசி ; வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனம் ஆறு மாதமாக பயன்பாடின்றி உள்ள நிலையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வழி இல்லை. வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) ஒதுக்கப்பட்ட அரசு வாகனம் ஆறு மாதமாக பயன்பாட்டில் இல்லை. இந்த வாகனம் வாங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வீணாகி உள்ளது. இதனால் இந்த வாகனம் யூனியன் அலுவலக வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாததால் விஷப்பூச்சிகளின் இருப்பிடமாகவும் வாகனம் மாறிவிட்டது.வாகனம் இல்லாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்ச்சிப் பணியை ஆய்வு செய்வதற்கு செல்வதில்லை. கள ஆய்விற்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே பணிபுரிய வேண்டியுள்ளது. இந்த வாகனத்தின் டிரைவரும் எந்தப் பணியும் இல்லாமல் உள்ளார். எனவே வீணான வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் உடனடியாக வாங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
08-Nov-2024