அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கு திருக்குறள் வினாடி வினா
விருதுநகர்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி டிச. 21ல் நடக்கிறது.கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடக்கிறது.மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டியானது அந்தந்த மாவட்டங்களில் டிச. 21ல் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் பங்கேற்கும் இறுதி போட்டி விருதுநகரில் டிச. 28ல் நடக்கிறது.மேலும் விவரங்களுக்கு 93616 13548, 86675 73086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.