உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு கம்பியில் திருவள்ளுவர்

டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு கம்பியில் திருவள்ளுவர்

விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் சுற்றி பாதுகாப்பு கம்பியில் திருவள்ளுவர் உருவம், திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதை பார்ப்பவர்களின் கண்ணை கவரும் வகையில் உள்ளது.விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சை, பரிசோதனை, பிரசவத்திற்காக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.மேலும் பாண்டியன் நகர், காரியாபட்டி, கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து விருதுநகர் வரும் வாகனங்களின் போக்குவரத்து காலை முதல் இரவு வரை நிறைந்து காணப்படும்.இங்கு மகப்பேறு மருத்துவமனை வளாகத்திற்கு அருகே டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு கருதி இரும்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு நடந்தது.ஆனால் வழக்கமான கம்பிகளை போல அல்லாமல் மிஷின் கட்டிங் மூலம் திருவள்ளுவர், மரம் பிம்பங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாதுகாப்பு கம்பிகள் ஒவ்வொன்றாக நிறுவப்பட்டு அதற்கான வண்ணங்கள் தீட்டும் பணிகள் நடந்தது.மகப்பேறு மருத்துவமனை வளாகம் என்பதால் குழந்தையின் மழலைச் சொல் குறித்து விளக்கும் திருக்குறள் இடம் பெற்றுள்ளது. இதற்கான விளக்கமும் எழுதப்பட்டுள்ளது. தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்கள் கவரும் வகையில் இருப்பதால் பலரும் நின்று கவனித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ