மேலும் செய்திகள்
'டவுட்' தனபாலு
27-Oct-2024
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய மூன்று பேரை ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் சண்முககனிக்கு சொந்தமான தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக ஸ்ரீவி., மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஆனந்திக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையில் போலீசார் பெத்தலுபட்டியில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்தபோது சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் காய்ச்சிய தங்கம், பொன் பாண்டி, நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து அரை லிட்டர் சாராயம், ரூ.500 ஐ பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
27-Oct-2024