உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மூவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

 மூவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண்கள் 3 பேர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றினர். மேலும் மூவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் பட்டா வழங்க கோரி மனு அளிக்க வந்த காரியாபட்டியைச் சேர்ந்த மும்தாஜ் 49, ஆசாம்மாள் 24, நாகலட்சுமி 25, என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் வசிக்கும் நிலத்திற்கு பட்டா தேவையை கருத்தில் கொண்டு பல மாதங்களாக கலெக்டரிடம் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லாததால் விரக்தியில் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதாக, தெரிந்தது. இதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே வரும் மக்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !