உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் நவ.30 வரை நீட்டிப்பு -- நிரந்தரமாக்க பயணிகள் வலியுறுத்தல்

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் நவ.30 வரை நீட்டிப்பு -- நிரந்தரமாக்க பயணிகள் வலியுறுத்தல்

ராஜபாளையம்:ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதை நிரந்தரமாக இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். 2023 ஏப்., முதல் இந்த வாராந்திர ரயில் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களிடம் இந்த ரயிலுக்கு வரவேற்பு இருப்பதால் இரு மார்க்கங்களிலும் (06029/06030) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது நவ.,30 வரை நீட்டிப்புக்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த நீட்டிப்பால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிறப்பு ரயிலாக 13 முறை நீட்டிக்கப்பட்ட இந்த ரயிலை நிரந்தரமாக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ