உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ. 3.95 கோடியில் தெப்பம் சீரமைப்பு

ரூ. 3.95 கோடியில் தெப்பம் சீரமைப்பு

சேத்துார்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் ரூ. 3.95 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட தெப்பம் திறக்கப்பட்ட நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மாசி மகத்தில் தெப்ப திருவிழா நடக்கவுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய தலம். இக்கோயிலில் வைகாசி பிரமோற்ஸவ தேரோட்டம், மாசி மகம், தபசு , திருவிழா ஆகியவை பிரசித்தி பெற்ற திருவிழாக்கள். கோயில் முன்பு உள்ள தெப்பம் சேதம் அடைந்ததால் 1989 ம் ஆண்டிற்கு பின் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.இந்நிலையில் ஹிந்து அற நிலைய துறை சார்பில் ரூ. 3.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து நேற்று காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தெப்பத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ஹிந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகராஜன், பரம்பரை அறங்காவலர் துரை ரத்னகுமார், செயல் அலுவலர் கலாராணி கலந்து கொண்டனர். தெப்பக்குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மார்ச் 12, 13 ல் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ