உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோணுகால் பாலம் பக்கவாட்டு சுவர் சேதம்

தோணுகால் பாலம் பக்கவாட்டு சுவர் சேதம்

காரியாபட்டி: மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் தோணுகால் குண்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர், இரும்பு கர்டர் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி தோணுகால் குண்டாற்றின் குறுக்கே 35 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. அப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு இடைவெளியாக உள்ளது. நடந்து செல்பவர்கள் சுவரைத் தொட்டாலே உடைந்து விடும் ஆபத்து இருக்கிறது. டூவீலர்களில் செல்பவர்கள் இடறினால் பல அடி தூரம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அதேபோல் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் இரும்பு கர்டர் சேதமடைந்து வெளியில் தெரிகிறது. வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். விபத்திற்கு முன் அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ