உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்தல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சி.ஐ.டி.யு., கிளைச் செயலாளர் முத்துராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மண்டல பொதுச் செயலாளர் போஸ், சி.ஐ.டி.யு., மத்திய சங்க மாவட்ட உதவித் தலைவர் கார்மேகம், ஏ.ஐ.டி.யு.சி., மண்டல பொதுச் செயலாளர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !