சாத்துாரில் காய் கனி மார்க்கெட் கடைகளை புதியதாக கட்டித்தர வியாபாரிகள் கோரிக்கை
சாத்துார் : சாத்துார்நகராட்சி சார்பில் புதியதாக காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டித் தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.சாத்துார்சிவன் கோயில் வடக்கு ரத வீதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த காய்கனி மார்க்கெட் கடைகள் தொடர்ந்து பராமரிக்க படாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கடைகளின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்தப் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் கடையின் அவல நிலையை கண்டு வேதனை அடைகின்றனர் .நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த காய்கனி மார்க்கெட் கடைகளை முற்றிலுமாக இடித்து அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்டி தருவதுடன் இங்கு ஏற்கனவே வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளுக்கே மீண்டும் கடைகளை வாடகைக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.