உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுரை ரோட்டில் அதிகரித்து வரும் டூவீலர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

மதுரை ரோட்டில் அதிகரித்து வரும் டூவீலர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் அதிகரித்து வரும் டூவீலர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நெரிசலை தவிர்க்கும் எல்லைக்குள் டூவீலர் இருப்பதை டிராபிக் போலீசார் உறுதி செய்ய வேண்டும்.விருதுநகர் நகராட்சியில் நகரமைப்பு பிரிவு பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. பார்க்கிங் வசதி இன்றி வணிக வளாகங்களுக்கு அனுமதி கொடுப்பது, அதற்கு பின் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் செய்வது என மோசமான நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பின் பின்னணியிலும் அரசியல்வாதிகளின் கை ஓங்கி உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.விருதுநகர் நகராட்சியில் 2 ஆண்டில் 4 கமிஷனர்கள் மாறிவிட்டனர். தற்போது வரை எந்த தெளிவான வளர்ச்சி பணியும் செய்யப்படவில்லை. நகர்மன்றங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எதிலும் தீர்வு இல்லை. மெயின் பஜாரை போல் மதுரை ரோட்டிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கும், மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், இதர வங்கிகளுக்கும் அதிகம் வருகின்றனர்.இதனால் ஜெராக்ஸ், டீ, ஸ்டூடியோக்கள் என அதை சார்ந்த கடைகள் நன்கு ஓடுகின்றன. ஆனால் இக்கடைகளில் நெரிசலை தவிர்க்கவும், டூவீலரை ரோடு வரை நிறுத்தியிருப்பதை தடுக்கவும் டிராபிக் போலீசார் நெரிசலை தவிர்க்கும் எல்லை கயிற்றை கட்டி வைத்துள்ளனர். ஆனால் அந்த கயிறே தெரியாத அளவுக்கு அதை கடந்து எட்டடிக்கு மேல் டூவீலர்கள் ரோடு வரை ஆக்கிரமித்துள்ளன.இதை சரி செய்ய டிராபிக் போலீசார் அடிக்கடி இப்பகுதிகளில் ரோந்து செய்ய வேண்டும். அரட்டை அடிப்போரும் டூவீலரை நிறுத்தி விட்டு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே டூவீலர் ஆக்கிரமிப்புகளை மதுரை ரோட்டில் இருந்து குறைத்தால் மட்டுமே நகரின் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி