உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சரக்கு வாகனங்களால் போக்குவரத்திற்கு நெரிசல் கண்டுகொள்ளாத டிராபிக் போலீசார்

சரக்கு வாகனங்களால் போக்குவரத்திற்கு நெரிசல் கண்டுகொள்ளாத டிராபிக் போலீசார்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பஜார் பகுதியில் சரக்கு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்வது தெரிந்தும் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. அருப்புக்கோட்டையில் நகருக்குள் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கின்றன. நகரில் மதுரை ரோடு, பெரிய கடை பஜார், அண்ணாதுரை சிலை பகுதி, மெயின் பஜார் பகுதியில் ரோடு குறுகலாக உள்ளது. இதில் நடைபாதை கடைகள், கடைகள் வைத்திருப்போர் ஆக்கிரமிப்புகளால் ரோட்டில் ஒதுங்க கூட இடம் இல்லை. இந்த பகுதியில் தான் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், காய்கறி மார்க்கெட், பலசரக்கு கடைகள் உட்பட அதிகம் உள்ளன. மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதில் இப்பகுதி கடைகளுக்கு சரக்கு இறக்க வரும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரக்குகளை குறிப்பிட்ட நேரங்களில் இறக்க வேண்டும் என்ற போக்குவரத்து போலீசார் உத்தரவு இருந்தும் தங்கள் இஷ்டத்திற்கு கடைகளுக்கு லாரிகள் மூலம் சரக்குகளை இறக்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் கூட்டம் அதிகமாக இந்த பகுதிகளில் உள்ளது. நெரிசலும் அதிக அளவில் இருக்கிறது. போலீசார் இந்த பகுதியில் சரக்கு லாரிகளை நிறுத்த அனுமதிக்காமலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை