உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா கடத்தல்; மூன்று பேர் கைது

கஞ்சா கடத்தல்; மூன்று பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பொருப்பு மேட்டுப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் 31, இவரது பெற்றோர் சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்து வளர்ந்த விஜயகுமார், அந்த மாநில பெண்ணை திருமணம் முடித்து தற்போது திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலை அகதிகள் முகாமிற்கு வரும்போது, வன்னியம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் நடத்திய சோதனையில் காரில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.அவரிடம் நடத்திய விசாரணையையடுத்து, மொட்டமலை அகதிகள் முகாமை சேர்ந்த மாரிஸ்டின் 25, என்பவரிடம் இருந்து 900கிராம், கொத்தங்குளத்தைச் சேர்ந்த மகாவீரபாண்டி 29, என்பவரிடமிருந்து 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான விஜயகுமார் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ