உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் சேவையில் மாற்றம்

விருதுநகர்:சேலம், திருவனந்தபுரம், மதுரை ரயில்வே கோட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்புப்பணிகளால் முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகுதி ரத்து

* இன்று (மே 2) முதல் மே 5 வரை, மே 9 முதல் 15 வரை மதுரை -- கோவை ரயில் (16722) போத்தனுார் -- கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மே 6 முதல் 8 வரை பொள்ளாச்சி -- கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.* மே 24ல் சென்னை எழும்பூர் -- குருவாயூர் ரயில் (16127) சாலக்குடி - - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.* ஜூன் 10ல் தாம்பரம் -- நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) திருநெல்வேலி -- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.* ஜூன் 11ல், நாகர்கோவில் -- தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) நாகர்கோவில் -- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருநெல்வேலியில் இருந்து புறப்படும். நாகர்கோவில் -- கோவை ரயில் (16321), நாகர்கோவில் -- வள்ளியூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு வள்ளியூரில் இருந்து புறப்படும்.* ஜூன் 11ல் திருச்சி -- திருவனந்தபுரம் -- திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி -- திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.* ஜூன் 9ல் ஹவுரா -- குமரி வாராந்திர ரயில் (12665) வள்ளியூர் -- குமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதை

* மே 5, 7, 12ல் மயிலாடுதுறை -- செங்கோட்டை ரயில் (16847) மயிலாடுதுறை -- கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கும்பகோணத்தில் இருந்து புறப்படும். மே 7, 14, 21, 28ல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.* இன்று, மே 3, 5, 7, 9, 19, 21, 23, 24, 26, 28, 30, 31ல் செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் (16848), மே 3, 24, 31ல் குமரி -- ஹவுரா வாராந்திர ரயில் (12666), இன்று, மே 9, 23, 30ல் குமரி -- சர்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07229) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.* இன்று முதல் மே 7 வரை, மே 9 முதல் 14 வரை, மே 16ல் கோவை -- நாகர்கோவில் ரயில் (16322) கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.* மே 4ல் திருநெல்வேலி -- பிலாஸ்பூர் வாராந்திர ரயில் (22620) ரத்து செய்யப்படுகிறது. மே 11ல் கோவை சந்திப்பு செல்லாமல் போத்தனுார், இருங்கூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

தாமதம்

* மே 7, 21, 28ல் மதுரை -- காச்சிகுடா சிறப்பு ரயில் (07192) ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:05 மணிக்கு புறப்படும்.

ரத்து

* ஜூன் 11ல் திருநெல்வேலி -- குமரி பாசஞ்சர் (56708) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி