மேலும் செய்திகள்
'எண்ணும் எழுத்தும்' ஆசிரியர்களுக்கு பயிற்சி
13-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் வத்திராயிருப்பு ஒன்றிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ எண்ணும், எழுத்தும் 2 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, அரவிந்தன் தலைமை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் திருக்குமரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு பயிற்சி வகுப்பினை பார்வை யிட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜா, செல்வி, உமாமகேஸ்வரி, ஜெயலட்சுமி பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, மைய மேற்பார்வையாளர் கணேஸ்வரி செய்திருந்தனர்.
13-Sep-2025