ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
விருதுநகர்: டிச. 30 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கீழ்க்காணும் முக்கிய ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (12634), கொல்லம் - எழும்பூர் (16102), துாத்துக்குடி - எழும்பூர் - துாத்துக்குடி 'முத்துநகர்' (12693/12694), மதுரை - எழும்பூர் - மதுரை 'பாண்டியன்' (12637/12638) ஆகிய ரயில்கள் டிச. 28 முதல் 30 வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி (12633), எழும்பூர் - கொல்லம் (16101) ஆகிய ரயில்கள் டிச. 29 முதல் 31 வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.