உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி 43. இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை மனு அளிக்க நேற்று மதியம் 12:30 மணிக்கு எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்திற்கு முன்பு மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் அனுமதித்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி