உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ்சின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

பஸ்சின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

சிவகாசி: சிவகாசியில் ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகாசி பழனி ஆண்டவர் காலனி அருகே முத்து மாரி டிராவல்ஸ் பஸ் வந்து கொண்டிருந்தது. இதன் மேல் அதிகமான லக்கேஜ் உயரமாக இருந்த நிலையில் ரோட்டோரத்திலிருந்து வேப்பமரத்தின் கிளையில் பட்டது. மரத்தின் கிளை முறிந்து விழுந்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் மரக்கிளைகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !