உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரக்கன்று நட்டு இயற்கையை காக்கும் திமில் அமைப்பு

மரக்கன்று நட்டு இயற்கையை காக்கும் திமில் அமைப்பு

மரக்கன்றுகளை நடவு செய்து ராஜபாளையம் நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தி மழை அளவை அதிகரிக்க செய்கின்றனர் 'திமில்' அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள்.பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவை வெளியிடும் புகை காற்று மாசு ஏற்படுத்துகிறது.நகர்மயமாக்கல், விவசாயம் சாலைப் பணிகள் என பசுமையான மரங்களை அகற்றுவது போன்ற காரணங்களால் இயல்பு நிலை மாறி வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்து பசுமையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற பொறுப்பை நுாற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இணைந்து 'திமில்' அமைப்பின் நண்பர்கள் செய்து வருகின்றனர்.ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டி இரண்டு பக்கமும் 28 ஆயிரத்திற்கும் அதிகமான விதை பந்துகள் மழைக்காலத்திற்கு முன்பு தயார் செய்து வீசி பசுமையை பேணி காத்து வருகின்றனர். இவற்றில் அரசு, ஆல் போன்றவற்றின் விதைகள் பிரதானமாக உள்ளது.சிதிலமடைந்து சாக்கடை குளமாக மாறி இருந்த கருப்பஞானியார் கோயில் ஊருணியை துார் வாரி சுகாதாரமாக மாற்றி பூரணியை சுற்றி மரக்கன்றுகள் வைத்து உயிர் ஊட்டி உள்ளனர். தாலுகா அலுவலகம் பின்புறம், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் இடது பக்கம் என பல்வேறு இடங்களில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் நடவு செய்து பராமரித்துள்ளனர்.லட்சுமியாபுரம் குடியிருப்பு பகுதி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்ததால் நிழல் தரும் வகையில் பசுமை மிகுந்த இடமாக மாறி உள்ளது.நகராட்சியோடு இணைந்து நிலம் காற்று நீர் மாசுகளை தவிர்க்க பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மரக்கன்றுகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து தருகின்றனர்.மரக்கன்றுகளை நடவு செய்வதோடு தொடர் பராமரிப்பையும் கண்காணிப்பதால் நகரில் வெப்பத்தின் போது பாதிப்பு குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ